வாங்க நண்பர்களே,
ரொம்ப நாளாச்சு பாத்து… எல்லாரும் எப்படி இருக்கீங்க?
என்னொட பையன் டான்ஸ் ஒன்னு பாருங்க..
மீண்டும் விரையில்..
என்றும் அன்புடன்
சங்கர்
தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் புரிந்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக்கிரையெனப் பின் மாயும் - சில
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?
- பாரதி
வாங்க நண்பர்களே,
ரொம்ப நாளாச்சு பாத்து… எல்லாரும் எப்படி இருக்கீங்க?
என்னொட பையன் டான்ஸ் ஒன்னு பாருங்க..
மீண்டும் விரையில்..
என்றும் அன்புடன்
சங்கர்
எழில்நிலாவிலிருந்து சில தகவல்களை சுட்டுடேன்..
ஆமா, எதுக்கு சுட்டதுனு கேட்டகலையே.. கொஞ்ச நாளுக்கு முன்னால.. ஓயிங்ங்க்.... (கொசுவத்தி சுத்திக்கோங்க உங்க முன்னாடி.. பிளாஷ்பேக்-ப்பா..) நம்ம வலைபதிவுகளில் ஒரு சுவராசியமான ஒரு காரசாரமான விவாதம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது (அந்த பின்னோட்டம் மேட்டரில்லைங்கோ..) .. அதாவது பெண்களுக்கு தாலி ஒரு வேலியா ? இல்லை ஒரு அணிகலணா ? எகப்பட்ட கருத்துகள்.. இந்த தாலி எல்லாம் ஒரு பெண்ணை அடிமைப் படுத்துவற்கு, பெண்ணுரிமை, பெண்ணடிம, பெண்ணத்திக்கம்..சாரி ஆண்ணாத்திக்கம்.. அப்படி இப்படினு.. ஆனா, அந்த மாதிரி ஒரு விசயமில்லை, நிறைய விசயங்கள் நம்ம முன்னோர்கள் வைச்சுருக்காங்க.. ஆனா என்னா, எதுக்கு சொல்லாம வைச்சுட்டாங்க.. சொன்ன இந்த பயலுக கேக்க மாட்டாங்குனு தானா தெரியலை.. அதுல சில தான் கீழே நம்ம சுட்ட விசயம்..
இந்த கீழ்வரும் தகவல்கள் எழில்நிலாவிலிருந்து சுட்டது:
இயற்கையோடு இணைந்த நமது தமிழர் வாழ்க்கையில் இந்த அணிகலன் எப்படி மருத்துவ ரீதியாக பயன்படுகிறது என்பதனை காண்போம்.
நம்மவர்களின் ஆடை அணிகலன்கள் உடல் ரிதியாக, மருத்துவம் சம்பந்தப்பட்டது. நம் முன்னோர்கள் பின்பற்றும் சம்பிரதாயச் செயல்களுக்கு எல்லாம் கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.
மெட்டி:
திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு மெட்டி அணிவிப்பதை காணலாம். திருமணமான பெண்கள் கால் விரலில் மிஞ்சி அணியவேண்டும் என்பது காலங் காலமாய்ப் பின்பற்றப்படும் தமிழ் மக்களின் சம்பிராதாயச் செயலாகும். [பெருவிரலுக்கு அடுத்த விரலில் இந்த மெட்டி அணிவிக்கப்படுகிறது.]
ஆனால் நாகரிகம் வளர்ந்து விட்ட இக்காலத்தில் திருமணமான பெண்கள் மிஞ்சி அணிய வெட்கப்படுகின்றனர். திருமணமானதற்கு அடையாளமாய் தாலி இருந்தால் மட்டும் போதும், மிஞ்சி தேவையில்லை என அவர்கள் எண்ணுகிறார்கள்.
அந்த விரலிருந்து ஒரு நரம்பு கர்ப்பபைக்கு செல்கிறது.பெண்களின் கருப்பை
நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.
பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி
அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.
கொலுசு:
கொலுசு கொஞ்சம் விவாகரமான விஷயம்.
பொதுவாக, உடல் ரிதியாக ஆண்களைவிட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக்கூடாது என்பதற்குதான் இந்த கொலுசு. உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது. வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது. [சில விவாகரமான விஷயங்கள் *இலை மறை கனியாக* இருக்க வேண்டும்
என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்]
அரைநாண் கொடி[அரணாக்கொடி]:
அரைநாண் கொடி[அரணாக்கொடி] உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழ்லிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது [+ / -- ] சம நிலைக்கு கொண்டு வர இந்த அரைநாண்க்கொடி உதவுகிறது.
மகாபாரத்தில் திருடாஸ்தரன் தன் மகன் துரியோதனன் போருக்கு போகுமுன் தலையிருந்து தொட்டு சீர்வாதம் செய்து, வழங்கி வரும்போது இடுப்புக்கு வந்தவுடன் துரியோதனன் கட்டியிருந்த அரைநாண்க்கொடியால் இடுப்புக்கு கீழ் சீர்வாதம் வழங்க முடியவில்லை. பின் துரியோதனன் தொடை பிளந்து இறந்த கதை எல்லோரும் அறிந்ததே. இந்த அரைநாண்க்கொடி உடல்
பாதுகாப்புக்கும் பயன்படுகிறது.
இதர விசயங்கள்:
மூக்கு குத்துவது, காது குத்துவது [துளையிடுவது] உடலில் உள்ள வாயுவை [காற்றை] வெளியேற்றுவதற்கு. [ release ]
கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.
ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,
பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.
அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.
நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.
அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.
இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.
இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.
பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.
இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.
இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.
ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.
உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும்.
தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.
தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):-
1. தலையணி:
தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி.
2. காதணி:
தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை,
கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல்.
3. கழுத்தணிகள்:
கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை,
நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்டசரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை.
4. புய அணிகலன்கள்:
கொந்திக்காய்.
5. கை அணிகலன்:
காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு.
6. கைவிரல் அணிகலன்கள்:
சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப்பூ.
7. கால் அணிகலன்கள்:
மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு.
8. கால்விரல் அணிகள்:
கான் மோதிரம், காலாழி, தாழ், செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி.
9. ஆண்களின் அணிகலன்கள்:
வீரக்கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைநாண்,
பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம்,
கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம்,
முத்து வடம், கடுக்கண், குண்டலம் ஆகியனவாகும்.
(குறிப்பு உதவி)..நன்றி: தமிழ் நாட்டு அணிகலன், சாத்தான் குளம் அ. இராகவன், எழில்நிலா)
ஓம்..ஹீரீம்.. ஹாம்ம்ம்.. சூ மந்திரகாளி..
என்ன மக்களே, என்னாடா சொல்லவாரானு பாக்கிறீங்களா? நேத்து தான் நம்ம ஹாரி போட்டர் நாவல் படிச்சேன்.. அந்த விளைவுகள் தான் இது.. ஒரு தம்-ல உக்காந்து படிச்சு முடிச்சுட்டேன்..
கதை நல்ல கதை தான். சிறுவர் சிறுமிக்களுக்குள்ள மந்திர தந்திர கத.. நம்ம ஏன் படிக்கனும் நினைச்சுட்டு இருந்த போது தான் அந்த முதல் திரைப்படம் வந்தது... உடனே மட மட னு எல்லா புத்தகங்களையும் படிச்சு முடிச்சுட்டு, இப்ப வெளியான புத்தகதிற்காக காத்திருக்க தொடங்கினேன்.. ஒரு வழியா இந்த புத்தகம் வந்திட்டு.. என்னா, இப்போ அடுத்த புத்தகத்திற்கு வெட்டிங்.. ஆனா அடுத்த புத்தகம் தான் இந்த தொடரில் கடைசி.. ஆகவே ஒரு தொடர் புத்தகம் படிப்பு முடிந்த்தது.. கண்டிப்பா நம்ம குழுந்தைகள் காலத்தில்ஹ் இந்த ஹாரி போட்டர் ஒரு வரலாறு சின்னம் தான்.
சரி இந்த புத்தகத்தை பற்றி ஏற்கனவே நிறைய பேர் வலைபதிவில் எழுதிட்டாங்க.. ஒரு அண்ணாச்சி சஸ்பஃன்ஸ வேற உடைத்துவிட்டார்.. ஆகவே, நம்ம இந்த புத்தக விமர்சனத்திற்கு வராமல், இந்த புத்தகத்தை அம்மணி எப்படி எல்லாம் ரசிச்சு எழுதிருக்கானு பாக்கலாம்..
1. யாரை யாரையும் சேர்த்து வைத்தால் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று
2. யாரை போட்டு தள்ளுனா, அடுத்த நாவலில் ஹாரி பெரிய ஆளா காண்பிக்க முடியும் என்று
3. யாரை மக்கள் அந்த அரை இரத்த இளவரசனா நினைக்க மாட்டாங்க என்று
இப்படி ஏகப்பட்ட ரசிக்க தகுந்த வகையில்..
அப்புறம் அடுத்த நாவலுக்கு இன்னும் கொஞ்சம் மவுசு ஏத்திவிட்டாங்க..
1. யார் அந்த ஆர். ஏ. பீ (R A B)?
2. ஹாக்வேர்ட் (Hogwarts) திறக்குமா ?
3. ஹாரி திறந்தாலும் பள்ளிக்கு வந்து பட்டம் பெறுவானா ?
4. அந்த ஆறாவது கோரோகர்ஸ் என்னா ?
5. ஒரு வேளை ஹாரி சாகுவானா, இல்லை அந்த வால்டமார்ட் (நான் இந்த பெயரை சொல்ல பயப்படலை.. அப்படினா நான் யாராயிருப்பேன்??)
எப்படியோ இன்னும் இரண்டு வருடத்தில் எனக்கு இன்னொரு 30$ செலவு.. அவ்வளவு தான்.
என்ன மனசுல ஒரு சின்ன வருத்தம். அப்படி நம்ம விட்டலாசார்யா கதையே இந்த ரோலிங்க் அம்மணி பல கோடி காசாக்கிட்டேனு தான்..அதே ஏழு மலை ஏழு கடல் தாண்டி மந்திரவாதி எப்படி தான் உயிரை ஒரு சின்ன பூக்குள்ளே உள்ள ஒரு சின்ன வண்டில் வைப்பானே அதே மாதிரி தான் இந்த மந்திரவாதியும். சே.. நம்ம patent வாங்கிருக்கனும்..
என்ன நண்பர்களே, நம்ம விஜிக்கு (அல்வாசிட்டி விஜயை இப்படி தான் கூப்பிடுவேன்) ஒரு நன்றி சொல்லிருவோம்.. ஆனா, நான் இந்த ஆட்டைக்கு வரலே.. ஏன் பாக்குறியா ? வேறும் ஒரு அஞ்சு கேள்விதானே இந்த புத்தக மீமீ.. (மீமீ ஒரு சீன பெண் எங்க அலுவலகத்திலிருந்தா.. அவ ஞாபகம் தான் வருது).சரி நம்ம இந்த புத்தக மீமீயில் கேக்காத பல கேள்விகளுக்கும்
விடையளிச்சுறுவோம்..
பிடித்த சஞ்சிகைகள்:
விகடன் குடும்ப சஞ்சிகைகள்
துக்ளக்
நக்கீரன்
கல்கி
ஒரு பேப்பர் (இணைய சஞ்சிகை) (நண்பர்களே, கண்டிப்பாக வாசியுங்கள்.. )
தமிழ் புத்தகங்கள், படித்ததில் மிகவும் பிடித்தது :
கடல் புறா, யுவனராணி - சாண்டியன்
பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் - கல்கி
உடையார், அப்பா, கிருஷ்ன அர்ச்சுனன் - பாலகுமாரன்
அக்னி சிறகுகள் - அப்துல்கலாம்
வந்தார்கள், வென்றார்கள் - மதன்
உதிரிபூக்கள் (கதை வசனம்) - மகேந்திரன்
கோட்டைபுரத்து வீடு - இந்திரா செளந்திராஜன்
மனம் மலரட்டும் - சுவாமி சுகபோகனந்தா
தமிழ் கவிதைத் தொகுப்புகள் படித்ததில் மிகவும் பிடித்தது :
பாரதியார் கவிதைகள்
பாரதிதாசன் கவிதை தொகுப்புகள் (மதுரை தொகுப்புகளின் மின்பதிப்பு)
வைரமுத்து கவிதைத் தொகுப்பு
பா. விஜயின் - உடைந்த நிலா
புதுவை ரத்தினதுரையின் - உணர்ச்சி வரிகள் (PDF from web)
முதலில் படித்த ஆங்கில நாவல்:
The Almighty - Irvine Wallace
ஆங்கில நாவல்கள், புத்தகங்கள், படித்ததில் மிகவும் பிடித்தது :
Not a penny More, Not a penny Less - Jeffrey Archer
Master of Game, If tommorow Comes - Sidney Sheldon
Icon, Negogiator - Fredrick Forsyth
Patriot Games - Tom Clancy
Harry Potter & Globet of Fire - J K Rowling
Face off - Emma Brooks
திரும்ப திரும்ப படிக்கும் புத்தகங்கள்:
திருக்குறள் - தமிழன் பண்பாட்டு கையேடு
பொன்னியின் செல்வன்
கடல் புறா
அவ்வையின் அமுத மொழிகள்
குடும்ப விளக்கு
படிக்க நினைத்த புத்தகங்கள்:
சத்திய சோதனை - மகாத்மா
தொல்காப்பிய பூங்கா - கருணாநிதி
மோகமுள் - தி. ஜானகிராமன்
படிக்க காத்திருக்கும் புத்தங்கள்:
Harry potter & The Half blood Prince - JK Rowling (Reserved @ borders already)
Da Vinci Code
தொல்காப்பிய பூங்கா - கருணாநிதி
சரி சரி.. நம்ம இந்த புத்தக மீமீ விளையாட்டுக்கான விடைகளை கொடுத்துறுவோம்..
சொந்த புத்தகங்கள் : 30+ சுட்ட புத்தகங்கள் : 30+
விலைக்கு வாங்கிய கடைசி புத்தகம்: The Red Sun Rising - Tom Clancy விலை : 50 யூ.எஸ் செண்ட்
படித்ததில் கடைசி (இன்னைக்கு காலையில்): தி டித் ஆப் டைகர்
ஐப்பெரும் புத்தகங்கள் : பொன்னியின் செல்வன், கடல்புறா, யுவனராணி, அக்னிசிறகுகள், திருக்குறள்-தமிழன பண்பாட்டு கையேடு
செம்மறி ஆட்டுக் கூட்டம், என் அப்பால் தொடர :
அருணாச்சலம், ஜேம்ஸ்ராஜ், கணேசஷ் பாலுறு, செல்வராசன், மரு. நடராசன் (யாருக்கு வலைபூக்களில்லை)
ஆமா, இந்த பதிவை அல்வாசிட்டியில் போடவா, இல்லை என்னோட இன்னொரு பிளாக்கில் போடாவா-னு ரொம்ப யோசனை.. அடே, கட் அண்ட் பேஸ்ட் தானே.. இரண்டு இடத்திலும் போட்டுறுவோம்.. என்னா நான் சொல்லுறது..
அடுத்து நம்ம சினிமா சீசீ அரம்பிச்சுரலாமா ?