Monday, July 18, 2005

தமிழர் வாழ்க்கையில் ...

எழில்நிலாவிலிருந்து சில தகவல்களை சுட்டுடேன்..

ஆமா, எதுக்கு சுட்டதுனு கேட்டகலையே.. கொஞ்ச நாளுக்கு முன்னால.. ஓயிங்ங்க்.... (கொசுவத்தி சுத்திக்கோங்க உங்க முன்னாடி.. பிளாஷ்பேக்-ப்பா..) நம்ம வலைபதிவுகளில் ஒரு சுவராசியமான ஒரு காரசாரமான விவாதம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது (அந்த பின்னோட்டம் மேட்டரில்லைங்கோ..) .. அதாவது பெண்களுக்கு தாலி ஒரு வேலியா ? இல்லை ஒரு அணிகலணா ? எகப்பட்ட கருத்துகள்.. இந்த தாலி எல்லாம் ஒரு பெண்ணை அடிமைப் படுத்துவற்கு, பெண்ணுரிமை, பெண்ணடிம, பெண்ணத்திக்கம்..சாரி ஆண்ணாத்திக்கம்.. அப்படி இப்படினு.. ஆனா, அந்த மாதிரி ஒரு விசயமில்லை, நிறைய விசயங்கள் நம்ம முன்னோர்கள் வைச்சுருக்காங்க.. ஆனா என்னா, எதுக்கு சொல்லாம வைச்சுட்டாங்க.. சொன்ன இந்த பயலுக கேக்க மாட்டாங்குனு தானா தெரியலை.. அதுல சில தான் கீழே நம்ம சுட்ட விசயம்..

இந்த கீழ்வரும் தகவல்கள் எழில்நிலாவிலிருந்து சுட்டது:

இயற்கையோடு இணைந்த நமது தமிழர் வாழ்க்கையில் இந்த அணிகலன் எப்படி மருத்துவ ரீதியாக பயன்படுகிறது என்பதனை காண்போம்.

நம்மவர்களின் ஆடை அணிகலன்கள் உடல் ரிதியாக, மருத்துவம் சம்பந்தப்பட்டது. நம் முன்னோர்கள் பின்பற்றும் சம்பிரதாயச் செயல்களுக்கு எல்லாம் கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.

மெட்டி:

திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு மெட்டி அணிவிப்பதை காணலாம். திருமணமான பெண்கள் கால் விரலில் மிஞ்சி அணியவேண்டும் என்பது காலங் காலமாய்ப் பின்பற்றப்படும் தமிழ் மக்களின் சம்பிராதாயச் செயலாகும். [பெருவிரலுக்கு அடுத்த விரலில் இந்த மெட்டி அணிவிக்கப்படுகிறது.]

ஆனால் நாகரிகம் வளர்ந்து விட்ட இக்காலத்தில் திருமணமான பெண்கள் மிஞ்சி அணிய வெட்கப்படுகின்றனர். திருமணமானதற்கு அடையாளமாய் தாலி இருந்தால் மட்டும் போதும், மிஞ்சி தேவையில்லை என அவர்கள் எண்ணுகிறார்கள்.

அந்த விரலிருந்து ஒரு நரம்பு கர்ப்பபைக்கு செல்கிறது.பெண்களின் கருப்பை
நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி
அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.

கொலுசு:

கொலுசு கொஞ்சம் விவாகரமான விஷயம்.

பொதுவாக, உடல் ரிதியாக ஆண்களைவிட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக்கூடாது என்பதற்குதான் இந்த கொலுசு. உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது. வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது. [சில விவாகரமான விஷயங்கள் *இலை மறை கனியாக* இருக்க வேண்டும்
என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்]

அரைநாண் கொடி[அரணாக்கொடி]:

அரைநாண் கொடி[அரணாக்கொடி] உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழ்லிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது [+ / -- ] சம நிலைக்கு கொண்டு வர இந்த அரைநாண்க்கொடி உதவுகிறது.

மகாபாரத்தில் திருடாஸ்தரன் தன் மகன் துரியோதனன் போருக்கு போகுமுன் தலையிருந்து தொட்டு சீர்வாதம் செய்து, வழங்கி வரும்போது இடுப்புக்கு வந்தவுடன் துரியோதனன் கட்டியிருந்த அரைநாண்க்கொடியால் இடுப்புக்கு கீழ் சீர்வாதம் வழங்க முடியவில்லை. பின் துரியோதனன் தொடை பிளந்து இறந்த கதை எல்லோரும் அறிந்ததே. இந்த அரைநாண்க்கொடி உடல்
பாதுகாப்புக்கும் பயன்படுகிறது.

இதர விசயங்கள்:

மூக்கு குத்துவது, காது குத்துவது [துளையிடுவது] உடலில் உள்ள வாயுவை [காற்றை] வெளியேற்றுவதற்கு. [ release ]

கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,

பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.

அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.

அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.

இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.

இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.

ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும்.

தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.


தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):-

1. தலையணி:
தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி.

2. காதணி:
தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை,
கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல்.

3. கழுத்தணிகள்:
கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை,
நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்டசரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை.

4. புய அணிகலன்கள்:
கொந்திக்காய்.

5. கை அணிகலன்:
காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு.

6. கைவிரல் அணிகலன்கள்:
சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப்பூ.

7. கால் அணிகலன்கள்:
மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு.

8. கால்விரல் அணிகள்:
கான் மோதிரம், காலாழி, தாழ், செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி.

9. ஆண்களின் அணிகலன்கள்:
வீரக்கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைநாண்,
பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம்,
கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம்,
முத்து வடம், கடுக்கண், குண்டலம் ஆகியனவாகும்.

(குறிப்பு உதவி)..நன்றி: தமிழ் நாட்டு அணிகலன், சாத்தான் குளம் அ. இராகவன், எழில்நிலா)

9 comments:

jeevagv said...

பூக்களும் சேர்த்தா சங்கர்?

குழலி / Kuzhali said...

அண்ணாச்சி இந்த மெட்டி விடயம்தான் புரியவில்லை, அதாகப்பட்டது எனக்கு தெரிந்தவரை மெட்டி திருமணமான ஆண்கள் அணிவதாக இருந்து அது பின் பெண்களிடம் புகுத்தப்பட்டது.... அது திருமணமான ஆண்களுக்கான அடையாளம், தற்போது கூட திருமணங்களில் ஆண்களுக்கு மெட்டி அணிவிக்கப்படுகின்றது... அதை மூன்றாம் நாளே மாப்பிள்ளை தூக்கி எறிந்து விடுவார் (அதே போல தாலியை தூக்கியெறிந்தால் விட்டுவிடுவோமா என்ன?? நம்ம கலாச்சாரம் என்ன ஆவது??)

மெட்டி பழங்காலத்தில் ஆண்களுக்காணதா? பெண்களுக்காணதா? ஆண்களுக்காணது என்றால் நீங்கள் மெட்டியைப்பற்றி சொன்னது சரியா?

NambikkaiRAMA said...

சங்கர் அருமையான பதிவு. இந்த மாதிரி காரணங்களை எடுத்துச் சொன்னால்தான் நன்றாயிருக்கும்.

பரஞ்சோதி said...

தாலியும், மெட்டியும் ஒருவர் திருமணம் ஆனவரா என்பதை அறியவே அணியப்பட்டது.

அந்தக்காலப் பெண்கள் தலை குனிந்து நடந்து போகும் போது அல்லது ஒரு ஆணிடம் பேசும் போது ஆணின் காலில் இருக்கும் மெட்டியை பார்த்து திருமணம் ஆனவர், ஆகாதவர் என்பதை அறிந்துக் கொண்டார்கள்.

ஆண்கள் பெண்களின் கழுத்தில் தொங்கும் தாலியின் வழியாக திருமணம் ஆனவர் என்பதை தெரிந்து கொண்டார்கள்.

மெட்டி ஆண்களுக்குரியது தான். பெண்களுக்கு மாற்றும் போது ஏதாவது காரணம் சொல்ல வேண்டுமே அதான்.

Online Security Tips and Tricks for Kids said...

அனைவரின் பின்னோட்டத்திற்கும் நன்றி...

குழலி, இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் கீழே இடப் பட்ட அணிகலன்களில் நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.

கசேந்திர பாலன், நீங்கள் சொல்வது போல எடுத்துக் கொள்ள முடியாது. ஏன்னொன்றால் இது மருத்துவர்களாலும் ஒத்துக் கொள்ளப்பட்டது. பண்டைய நூல்களில் ஆராய்ச்சிக் குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டது. முடிந்தால் நீங்கள் பூருடா என்பதற்கு ஒரு ஆதாரம் கொடுங்கள்.. ஏற்புடையாத என்று பார்க்கலாம்.

NONO said...
This comment has been removed by a blog administrator.
NONO said...

கஜேந்திர பாலன் சொல்வது போல் இதில் எவ்வளவு வீதம் அறிவியல் பூர்வமக நிருபித்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே!!!? தமிழ்நாட்டில் தான் எவ்வளவு மருத்துவமனை மற்றும் பல்கலைக்களகங்கள் இருக்கின்றன...யாரவது இப்படி பட்ட விசயங்களை விஞ்ஞானபூர்வமாக ஆராச்சி செய்து கட்டுரை சமர்ப்பித்தால் நலம்! அதுவரைக்கு நான் நம்பத் தயார் இல்லை soooorry!!!

5:34 AM

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

ரொம்ப ஆராய்ச்சிகள் நான் செய்ததில்லை... எனினும் உங்கள் பதிவின் செய்திகளை வேறு சில புத்தகங்களில் படித்துள்ளேன். அணிகலங்களுக்கு அர்த்தம் உண்டு என்பது நிஜம்... அது எல்லாம் அந்த காலம் அய்யா.. இப்போ எல்லாம் பிலாஸ்டிக் சமாச்சாரங்களும், கம்பி ஐட்டங்களுமே பட்டணத்தில் விற்கின்றன...ஊசி பாசி எல்லாம் போட்டுட்டு சுத்துறாங்க.. அது ஒரு பேசனாகி போச்சு..

Baharuddin M Sainuddin said...

இவைகள் தாம் செய்கின்ற முட்டாள்தனத்துக்கு வக்காலத்து வாங்க யாரோ எழுதிய அனுமாங்கள் போல் தெரிகிறது, அல்லாமல் அறிவியல் ஆதாரங்கள் எதுவும் தரப்பட்வில்லை...