Friday, June 24, 2005

ஒரோன்னு ஒன்னு

தி ஒன் -

ஒரோன்னு ஒன்னு
இரோன்னு இரண்டு
.
.
.
.
இப்படி போன எவ்வளவு நானாலும் வாய்ப்பாடு சொல்லலாம்.. சரி மேட்டருக்கு வருவோம்..இன்னைக்கு தொலைகாட்சியிலே ஒரு விளம்பரம். நம்ம ஹாலியுட் நடிக நடிகைகள், அப்றம் நம்ம மண்டேலா அவங்க எல்லாம் 'ஒன்' 'ஒன்' அப்படினு வாய்ப்பாடு சொல்லிட்டுயிருந்தாங்க.. என்னடா அப்படினு பாத்த, கட்ட கடைசில ஒரு இணைய பக்க முகவரி கொடுத்துட்டாங்க.. http://www.one.org

உலக எய்ட்ஸ் மற்றும் வறுமை ஒழிப்பு கையெழுத்து வேட்டை.. நீங்களும் உங்கள் கையெழுத்து அல்லது கைநாட்டை வைக்கங்கள்.

Wednesday, June 15, 2005

மீமீ.. மீமீ.. புத்தக மீமீ..

என்ன நண்பர்களே, நம்ம விஜிக்கு (அல்வாசிட்டி விஜயை இப்படி தான் கூப்பிடுவேன்) ஒரு நன்றி சொல்லிருவோம்.. ஆனா, நான் இந்த ஆட்டைக்கு வரலே.. ஏன் பாக்குறியா ? வேறும் ஒரு அஞ்சு கேள்விதானே இந்த புத்தக மீமீ.. (மீமீ ஒரு சீன பெண் எங்க அலுவலகத்திலிருந்தா.. அவ ஞாபகம் தான் வருது).சரி நம்ம இந்த புத்தக மீமீயில் கேக்காத பல கேள்விகளுக்கும்
விடையளிச்சுறுவோம்..


பிடித்த சஞ்சிகைகள்:
விகடன் குடும்ப சஞ்சிகைகள்
துக்ளக்
நக்கீரன்
கல்கி
ஒரு பேப்பர் (இணைய சஞ்சிகை) (நண்பர்களே, கண்டிப்பாக வாசியுங்கள்.. )

தமிழ் புத்தகங்கள், படித்ததில் மிகவும் பிடித்தது :
கடல் புறா, யுவனராணி - சாண்டியன்
பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் - கல்கி
உடையார், அப்பா, கிருஷ்ன அர்ச்சுனன் - பாலகுமாரன்
அக்னி சிறகுகள் - அப்துல்கலாம்
வந்தார்கள், வென்றார்கள் - மதன்
உதிரிபூக்கள் (கதை வசனம்) - மகேந்திரன்
கோட்டைபுரத்து வீடு - இந்திரா செளந்திராஜன்
மனம் மலரட்டும் - சுவாமி சுகபோகனந்தா

தமிழ் கவிதைத் தொகுப்புகள் படித்ததில் மிகவும் பிடித்தது :
பாரதியார் கவிதைகள்
பாரதிதாசன் கவிதை தொகுப்புகள் (மதுரை தொகுப்புகளின் மின்பதிப்பு)
வைரமுத்து கவிதைத் தொகுப்பு
பா. விஜயின் - உடைந்த நிலா
புதுவை ரத்தினதுரையின் - உணர்ச்சி வரிகள் (PDF from web)

முதலில் படித்த ஆங்கில நாவல்:
The Almighty - Irvine Wallace

ஆங்கில நாவல்கள், புத்தகங்கள், படித்ததில் மிகவும் பிடித்தது :
Not a penny More, Not a penny Less - Jeffrey Archer
Master of Game, If tommorow Comes - Sidney Sheldon
Icon, Negogiator - Fredrick Forsyth
Patriot Games - Tom Clancy
Harry Potter & Globet of Fire - J K Rowling
Face off - Emma Brooks


திரும்ப திரும்ப படிக்கும் புத்தகங்கள்:
திருக்குறள் - தமிழன் பண்பாட்டு கையேடு
பொன்னியின் செல்வன்
கடல் புறா
அவ்வையின் அமுத மொழிகள்
குடும்ப விளக்கு

படிக்க நினைத்த புத்தகங்கள்:
சத்திய சோதனை - மகாத்மா
தொல்காப்பிய பூங்கா - கருணாநிதி
மோகமுள் - தி. ஜானகிராமன்

படிக்க காத்திருக்கும் புத்தங்கள்:
Harry potter & The Half blood Prince - JK Rowling (Reserved @ borders already)
Da Vinci Code
தொல்காப்பிய பூங்கா - கருணாநிதி

சரி சரி.. நம்ம இந்த புத்தக மீமீ விளையாட்டுக்கான விடைகளை கொடுத்துறுவோம்..

சொந்த புத்தகங்கள் : 30+ சுட்ட புத்தகங்கள் : 30+
விலைக்கு வாங்கிய கடைசி புத்தகம்: The Red Sun Rising - Tom Clancy விலை : 50 யூ.எஸ் செண்ட்
படித்ததில் கடைசி (இன்னைக்கு காலையில்): தி டித் ஆப் டைகர்
ஐப்பெரும் புத்தகங்கள் : பொன்னியின் செல்வன், கடல்புறா, யுவனராணி, அக்னிசிறகுகள், திருக்குறள்-தமிழன பண்பாட்டு கையேடு
செம்மறி ஆட்டுக் கூட்டம், என் அப்பால் தொடர :
அருணாச்சலம், ஜேம்ஸ்ராஜ், கணேசஷ் பாலுறு, செல்வராசன், மரு. நடராசன் (யாருக்கு வலைபூக்களில்லை)

ஆமா, இந்த பதிவை அல்வாசிட்டியில் போடவா, இல்லை என்னோட இன்னொரு பிளாக்கில் போடாவா-னு ரொம்ப யோசனை.. அடே, கட் அண்ட் பேஸ்ட் தானே.. இரண்டு இடத்திலும் போட்டுறுவோம்.. என்னா நான் சொல்லுறது..

அடுத்து நம்ம சினிமா சீசீ அரம்பிச்சுரலாமா ?



Tuesday, June 07, 2005

பூனைக்கு யாரு மணி கட்டுறது ?

முதலமைச்சர் பொது நிவாரண நிதி பற்றிய பொது தகவல்:

முதலமைச்சர் பொது நிவாரண நிதி பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவுவதில் முக்கிய பங்காற்றுகிறது. மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் இந்த நிதியிலிருந்து பண உதவிகளை சில பல கிழ்கண்ட காரணங்களுக்காக செய்வார்கள்.காரணங்கள் :


  1. இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டால்

  2. சாதி கலவரங்களால் பாதிக்கப்பட்டால்

  3. விபத்துக்களால் பாதிக்கப்பட்டால்

  4. வன விலங்குகளால் பாதிக்கப்பட்டால்

  5. விலையுறந்த அறுவைசிகிச்சைக்கு

  6. உடல் ஊனமுற்றோருக்கு

  7. வாழ வழியில்லாதவாருக்கு

  8. சேவை நிறுவனங்களுக்கு

  9. ஏழை மாணவ மாணவியர் கல்விக்கு

  10. மற்றும் பல முடியாதவர்களுக்கு


மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிப் பற்றி அறிய : இங்கே சொடுக்கவும்

சரி, இப்போ இந்த நிதி எல்லாம் யாரு கொடுக்குக்காங்க ? எல்லாம் பொது சனங்கள் தான்.. அவங்களுக்கு வரி சலுகைகள் உண்டு.. இப்போ, இந்த நிவாரண நிதியிலிருந்து ஒருத்தருக்கு நிதி உதவி பண்ணனுமுனா, அவங்க கண்டிப்பா பாதிக்கப் பட்டு வாழவே முடியாத நிலமையிலிருக்கணும்.. அதை அந்த ஊரு ஆட்சியர் உறுதி செய்யனும்..

ஆமா, இதை எல்லாம் ஏன் நான் இன்னைக்கு சொல்லுறேனு பாக்குறீங்களா ?

முதலமைச்சர் நிதியுதவி நல்லாவே செய்யுறாங்க.. நேத்து கூட நம்ம "பச்ச கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டில்" கட்டிய வரலட்சுமிக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி செஞ்சுறுக்காங்க.. வேண்டாமுனு யாரு சொன்னா.. நன்னா செய்யட்டும்.. சினிமாகறங்கல்லாம் தைரியலட்சுமினு புகழட்டும்.. ஆனா, நம்ம சூர்யசக்ரா சாமிகண்ணுக்கும் செய்யட்டும்.. அவரும் பாதிக்கப்பட்டவர் தானே.. அது தான் நம்ம கேள்வி.. இதை யாரு போயி அந்த அம்மாக்கிட்டே சொல்லுறது ? பூனைக்கு யாரு மணி கட்டுறது ?

பின் குறிப்பு: சுனாமியில் வாழ்விழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி செய்வதில் மத்திய அரசு மெத்தனம் காட்டுகிறது என்பது நம் முதல்வரின் வாதம்..

Wednesday, June 01, 2005

அன்புள்ள தமிழ்மன வலைப்பதிவின் வாசகர்களே

அன்புள்ள தமிழ்மன வலைப்பதிவின் வாசகர்களே,
இதர வலைபதிவின் வாசகர்களே,

எங்கே போச்சு உங்கள் பேச்சு. நம்மவூரு மரத்தடி பேச்சு தானா இந்த வலைபதிவு பேச்சுக்கள் ? இல்லை மரத்தடி.காம் என்பது உன்மை தானா ?
இன்று எதர்ச்சயாக காஞ்சி பிலிம்ஸ் வலைபதிப்பு பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு பதிப்பில் நண்பரின் "சூர்யசக்ரா சாமிகண்ணு" "சூர்யசக்ரா சாமிகண்ணு". அதை படித்த வாசகர்கள் எத்தனைபேர் என்று தெரியாது.. ஆனால் பின்னோட்டம் விட்டவர்கள் வேகு சிலரே.. ஏன் ? அதில் அவர் கடைசியாக் ஒரு கேள்வி கேட்டுருக்கீறார்..

"இந்த வீரலட்சுமிக்கும் பிள்ளைகளுக்கும் ஏதாவது நம்மால் உதவி செய்யமுடியுமா தமிழ்மணம் அன்பர்களே ? "

தமிழ்மனத்தில் ஒரு வேளை அன்பர்கள் இல்லையா ?
இல்லை இது தமிழ் மனம் இல்லையா ?
இல்லை இங்கு மனங்களேயில்லையா ?

காஞ்சி பிலிம்ஸின் மற்ற பதிப்புகள் வேண்டுமென்றால் மற்றவர்களுக்கு பிடிக்காமல் போகலாமல், ஆனால் சூர்யசக்ரா சாமிகண்ணு போன்ற பதிப்புகளுக்கு நீங்கள் பண உதவி பண்ணாவிட்டால் கூட அவர் கருத்துக்கு பதில் சொல்லிருக்கலாம்..

என்னவே போல ஆகிவிட்டது.. இவ்வளவுதானா உலகம்.. பேச்சு வேறு செயல் வேறு என்பது அரசியல்வியாதிகளுக்கு மட்டுமல்ல, நமக்குக்கும் தான் என்று இந்த வாசக சமுதாயம் சொல்லாமல் சொல்லிவிட்டது...