Tuesday, May 31, 2005

மூணு நாளா ...

வணக்கம் என் இனிய மக்களே, உங்களுக்கு பழக்கமுள்ள இந்த சங்கர் மீண்டும் எழுத வந்துள்ளேன்.. டேய்ய்ய்ய்ய்.. எங்கடா நேத்து இரண்டு பேரு எழுதுங்கனு சொன்னா ? எழுத அரம்பிச்சுரதா ? அப்பிடினு யாராச்சும் சொல்லுரதுக்குள்ளே, எழுதி முடிச்சுரலாம்..

கடந்த மூணு நாளா நல்ல தூக்கம்.. எனக்கு பிடிச்ச பொழுதுபோக்கே தூக்கம் தான்.. ஆமா, தூங்குனா பொழுது போகுதுலா..


என்ன, செலவே கிடையாது இந்த பொழுதுபோக்குக்கு.. எந்த போக்குவரத்தும் வேண்டாம்.. எந்த துணையிம் வேண்டாம்.. வேண்டுமானால் அந்த துணையை தூக்கத்தில் அழைச்சுக்கலாம், அணைச்சுகலாம், அடிச்சுக்கலாம்.. கலாம்..லாம்.. ம்ம்ம்ம்ம்..


தூக்கம் ஒரு விதத்தில் மருந்து தான்.. ஆனா அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே.. ஆகவே இடையில் கொஞ்ச நேரமாவது முழிச்சுருக்க வேண்டும். வேணா, அந்த நேரத்தில் பல் தோய்க்கிறதோ, சாப்பிடுறதோ செஞ்சுகலாம்.. குளிச்சுர கூடாது.. அப்புறம் தூக்க கெட்டுறும்..


தூக்கமே வரதாபோது, கொஞ்சம்காட்டி புக் படிச்சுசேன்.. பேஃடிரிக் போர்சித்-னு ஒரு ஆசிரியரோட 'நிகோசியேட்டர்' அப்படினு ஒரு உளவாளி கதை.. நல்லா எழுதிருக்காருப்பா.. முந்தில்லாம், நம்ம ராஜேஷ்குமார் நாவல் தான் படிப்பேன்.. இவரு அவருக்கொல்லாம் தாத்தா.. பின்னியெடுத்துட்டார்.. கதையை சொல்லிருல்லாம், ஆனா நம்ம மக்கள் படிக்கனும் நினைச்ச, பின்னே சஸ்பன்ஸ் போயிறும்.. அந்த கதை படிச்சு முடிச்சுட்டு இப்ப இன்னொரு கதை 'ஐகான்' படிச்சுட்டுயிருக்கேன்.. தமிழில் இந்த கதையொல்லாம் காப்பியடிக்கனும்..
பாக்கலாம்..


அப்புறம் 'The Serious of Unfortunate Events' & 'Taxi' படங்கள் பாத்தேன்.. அவ்வளவு
தான்பா.. மூணு நாளு பறந்தேபோச்சு.. முக்கா முக்கா மூணே நாளுதான் போ..
இந்த கேப்பில் ஒரு அருமையான பாடல் ஒன்று கேட்டேன்.. உடனே ஊருக்கு போன் அடிச்சு பொண்டாட்டிக்கிட்டே உன்னை தாண்டி நினைச்சேனு சொல்லி ஒரு ஐஸ் மழை..

பாடல் கீழே..
படம் : புவனா ஒரு கேள்விகுறி

இசை : டாக்டர் இசைஞானி இளையராஜா

பாடியவர் : எஸ். பி. பாலா

பாடல் :

விழியிலே மலர்ந்தது, உயிரிலே கலந்ததது

பெண்ணெனும் பொன்னழகே அடாடா எங்கொங்கும் உன்னழகே

அடாடா எங்கொங்கும் உன்னழகே

உன் விழியே போதுமடி மனம் மயங்கும் மெய் மறக்கும்

புது உலகின் வழி தெரியும் பொன் விளக்கே தீபமே..

(விழியிலே...)

ஒவியனும் வரைந்ததில்லையே உன்னைபோல்

ஓரழகைக் கண்டத்தில்லையே

காவியத்தின் நாயகி கற்பனைக்கு ஊர்வசி

கண்களுக்கு விளையந்த மாங்கனி காதலுக்கு மலர்ந்த பூங்கொடி

(விழியிலே...)
கையளவு பழுத்த மாதுளை பாலில்

நெய்யளவு பரந்த புன்னகைமுன்னழகில் காமினி பின்னழகில் மோகினி

மோகவலை சூடும் நேரமே யோகம் வர பாடும் ராகமே..

(விழியிலே...)


நாளை சந்திப்போம்..


Friday, May 27, 2005

நினைவு நாள் - நிதியுதவி நாள்

அப்புறம் மக்களே, வணக்கம். இந்த வாரயிறுதி ஒரு நீள வாரயிறுதியாம் (Long Weekend) இந்த ஊரில்.. ஒரு மூணு நாள் சேர்ந்தாப்புல லீவு விட்டுடா போதுமடா சாமி.. பெட்ரோல் விலைய கூட கூட்டிங்கனா பாத்துக்கொங்களேன்.. என்னடா நீண்ட வாரயிறுதினு கேட்டா, நினைவு தினமாம் (Memorial Day). யாருக்குடானேன் ? ஏன்னா நம்ம ஊருல யாராவது தலைவருகளுக்கு தான் நினைவு தினம் கொண்டாடுவோம். அமெரிக்காவுக்காக பல போர்களில் கலந்துகிட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துர நினைவு தினமுனு சொன்னான் நம்ம பக்கத்து சீட்டுக்காரன்..


ஆகா, நம்ம ஊருல இப்படி கொண்டாடுனா நல்லாயிருக்குமேனு நினைச்சுகிட்டே, குமுதம் புத்தகத்தை இணைய வழி படிக்க ஆரம்பிச்சேன். எடுத்த உடனே கண்ல பட்டது நம்ம வட நாட்டு பெண் அரசியல்வாதி ஒருத்தர் தான் பிறந்தநாளை 'நிதியுதவி தினமாக' கொண்டாட செல்லி தான் தொண்டர்களுக்கெல்லாம் கட்டளையிட்டது தான்.. ஆகா, பிறந்தநாளில் இந்த அம்மணி நிறைய நிதியுதவி எல்லாம் செய்ய போறங்க.. அதான் நிதியுதவி தினமா அறிவிச்சுருக்கனும். ஆனா பாரு பாவி அடிச்சலே பலே பல்டி, அது அவங்க நிதியுதவி பண்ணுற தினமில்லையாம்.. அவங்களுக்கு எல்லாரும் நிதியுதவி பண்ணுற தினமாம்.. அந்த பணத்தில் அவங்க கட்சி வளர்க்க போறாங்களாம். (இவங்களும், இவங்க குடும்பத்தாரும் நல்ல வளர்ந்துட்டாங்க.. )

Thursday, May 26, 2005

தமிழில் எழுத கடின முயற்சி..

ஆஹா.. என்ன ஒரு வரவேற்பு.. நிறைய பின்னோட்டங்கள் வந்து விழுந்துட்டு ...

ஆன என் மனைவி என்ன சொன்னா தெரியுமா ? பின்னொட்டம் வர முன்னாடி நீங்கள் உங்க வலைபதிப்பில் எழுத்து பிழையிருக்கா-னு ஒரு முன்னோட்டம் விடுங்கனு..

ஆமா நான் என்னா பரிட்சையா எழுத போறேன், பிழையிருக்கானு பாக்க. ஏதோ மனசில தோணுறதை அப்படி ஒரு பதிப்பா போட்ட நம்ம சனங்கள் எல்லாம் படிப்பங்க.. அவங்களுக்கும் இந்த மாதிரி ஒரு அனுபவமிருந்துருக்கலாம், அதுகூட ஞாபகம் வரலாம்.. எல்லாம் ஒரு பொழுதுபோக்குதானே.. (டியம் பாஸ்-னு, எழுதலாமுனு நினைச்சேன், அப்புறம் முடிஞ்சளவு தமிழில் எழுதுவோமேனு முயற்சி பண்ணுறேன்)

ஆன ஒன்னு மட்டும் உறுதி.. இந்த வலைபதிவில் எழுத ஆரம்பிச்சதிலிருந்து தமிழில் நான் எழுதி பல நாளாச்சினு நல்லாவே தெரியுது எனக்கு.. பத்தாப்பு படிக்கும் போது நான் தமிழ் மன்றத் தேர்வுல இரண்டாவது மார்க் மாநிலத்தில. நேர கொடுமைடா சாமி..

தமிழில் எழுதுறதுக்கு நமக்கே (சாரி எனக்கே) இவ்வளவு கஷ்டமாயிருக்கே, நம் பிள்ளைங் என்னா பண்ண போதோ தெரியலை.. எதாவது பண்ணா வேண்டாமா சனங்களே ? அதுக்கு தான் இந்த வலைபதிப்பு முயற்சியில் இறங்கியுள்ளேன்.. முதல என் தமிழ் எழுத்து பயிற்சிய வளர்த்துட்டு, என் பையன் தமிழுக்கு (ஆமா மக்களே, என் பையன் பேரு தமிழரசு, செல்லமா தமிழ் தமிழ்-னு கூப்பிடுவோம்) தமிழ் எழுத்து பயிற்சி கொடுக்கனும்..

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஓள

டென்சன் (தமிழ என்னாப்பா ??) ஆகாதீர்கள் மக்களே.. சும்மா ஞாபகப் படுத்தி பார்த்தேன்..

மீண்டும் மீண்டும் வருவேன்...

எழுதிட்டுயிருக்கும் போது ஆனந்த விகடனில் படிச்ச ஒரு சிரிப்பு ஞாபகம் வந்தது..
--------------------------------------------------
ஒருவர் : "தலைவரோட அரசியல் எதிர்காலமே இருண்டுடுமோனு பயமா இருக்குதா.. ஏன் ? "
மற்றொருவர் : "எல்லாப் படங்களுக்கும் சினிமாக்காரர்களே தமிழில் பெயர் வைக்க ஆரம்பிச்சுட்டாங்களே !!!

--------------------------------------------------

இப்படி எல்லாரும் தமிழுக்கு மாறிட்ட நம்ம அரசியல்வாதிகளுக்கு மொழி போராட்டம் நடத்துற வேலை கொஞ்சம் மிச்சம்..

என்றும் அன்புடன்
சங்கர்....

Wednesday, May 25, 2005

என்னடா எழுதுறது ?

அம்மா தாயே, எல்லாம் வல்ல ஆதி பராசக்தியே எல்லாரும் நல்லாயிருக்கனும் தாயே.. .

எப்பா, முதல் இரண்டு வரி எழுதியாச்சு.. வேற என்ன எழுதலாம்.. எல்.கே.ஜி, யூ.கே.ஜி வாழ்க்கைய பத்தி எழுதலாமா ? ஆமா, நம்ம பெரிய காந்தி, சுயசரிதையா எழுத போறோமுனு ஒரு குரல் உள்ளேயிருந்து.. எழுதுனா தான் என்னானு இன்னொரு குரல்..

எல்.கே.ஜி பள்ளி போனன்னைக்கு சருக்கு விளையாண்டு டவுசரை ஒட்டை போடத்தை எழுதவா ? இல்லை பள்ளி முடிஞ்சு எல்லாரும் வீட்டு போகும் போது னான் மட்டும் போக மாட்டேன் அடம்பிடிச்சைதை எழுதவா ?

யூ.கே.ஜி பள்ளியில் டவுசரில் ஆய் போயி ஆயாவிடம் அடி வாங்கியதை எழுதவா ? இல்லை அனுகிட்ட பாம்பு மாதிரி கை வச்சு குச்சி மிரட்டி வாங்கியதை எழுதவா ?

டேய்... டேய்... .. நிப்பாட்டு.. இதை எல்லாம் எதுக்கு எழுதனும் ? ஒரு அண்ணாச்சி அவரு வலைப்பதிவில் சொன்ன மாதிரி எழுதனுமேனு எழுதுறியா ? இல்ல ஆனந்த விகடனில் எழுதவிடலேனு எழுதுறியா ?

இப்படி எனக்குள்ளே ஆயிரம் கேள்வி ? (டேய்ய்ய்ய்.. என்னடா ஒரு ஆறு கேள்வி தானேயிருக்கு, அதுகுள்ளே ஆயிரம் கேள்விண்டே ?? )

ஏதோ மக்களே.. எதாவது எழுதுனுமுனு முடிவேடுத்தாச்சு.. நீங்க தான் அனுசரிச்சு போகனும்..

மீண்டும்.. எதாவது எழுத்திட்டு வரேன்...

என்றும் அன்புடன்
சங்கர்..