Thursday, May 26, 2005

தமிழில் எழுத கடின முயற்சி..

ஆஹா.. என்ன ஒரு வரவேற்பு.. நிறைய பின்னோட்டங்கள் வந்து விழுந்துட்டு ...

ஆன என் மனைவி என்ன சொன்னா தெரியுமா ? பின்னொட்டம் வர முன்னாடி நீங்கள் உங்க வலைபதிப்பில் எழுத்து பிழையிருக்கா-னு ஒரு முன்னோட்டம் விடுங்கனு..

ஆமா நான் என்னா பரிட்சையா எழுத போறேன், பிழையிருக்கானு பாக்க. ஏதோ மனசில தோணுறதை அப்படி ஒரு பதிப்பா போட்ட நம்ம சனங்கள் எல்லாம் படிப்பங்க.. அவங்களுக்கும் இந்த மாதிரி ஒரு அனுபவமிருந்துருக்கலாம், அதுகூட ஞாபகம் வரலாம்.. எல்லாம் ஒரு பொழுதுபோக்குதானே.. (டியம் பாஸ்-னு, எழுதலாமுனு நினைச்சேன், அப்புறம் முடிஞ்சளவு தமிழில் எழுதுவோமேனு முயற்சி பண்ணுறேன்)

ஆன ஒன்னு மட்டும் உறுதி.. இந்த வலைபதிவில் எழுத ஆரம்பிச்சதிலிருந்து தமிழில் நான் எழுதி பல நாளாச்சினு நல்லாவே தெரியுது எனக்கு.. பத்தாப்பு படிக்கும் போது நான் தமிழ் மன்றத் தேர்வுல இரண்டாவது மார்க் மாநிலத்தில. நேர கொடுமைடா சாமி..

தமிழில் எழுதுறதுக்கு நமக்கே (சாரி எனக்கே) இவ்வளவு கஷ்டமாயிருக்கே, நம் பிள்ளைங் என்னா பண்ண போதோ தெரியலை.. எதாவது பண்ணா வேண்டாமா சனங்களே ? அதுக்கு தான் இந்த வலைபதிப்பு முயற்சியில் இறங்கியுள்ளேன்.. முதல என் தமிழ் எழுத்து பயிற்சிய வளர்த்துட்டு, என் பையன் தமிழுக்கு (ஆமா மக்களே, என் பையன் பேரு தமிழரசு, செல்லமா தமிழ் தமிழ்-னு கூப்பிடுவோம்) தமிழ் எழுத்து பயிற்சி கொடுக்கனும்..

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஓள

டென்சன் (தமிழ என்னாப்பா ??) ஆகாதீர்கள் மக்களே.. சும்மா ஞாபகப் படுத்தி பார்த்தேன்..

மீண்டும் மீண்டும் வருவேன்...

எழுதிட்டுயிருக்கும் போது ஆனந்த விகடனில் படிச்ச ஒரு சிரிப்பு ஞாபகம் வந்தது..
--------------------------------------------------
ஒருவர் : "தலைவரோட அரசியல் எதிர்காலமே இருண்டுடுமோனு பயமா இருக்குதா.. ஏன் ? "
மற்றொருவர் : "எல்லாப் படங்களுக்கும் சினிமாக்காரர்களே தமிழில் பெயர் வைக்க ஆரம்பிச்சுட்டாங்களே !!!

--------------------------------------------------

இப்படி எல்லாரும் தமிழுக்கு மாறிட்ட நம்ம அரசியல்வாதிகளுக்கு மொழி போராட்டம் நடத்துற வேலை கொஞ்சம் மிச்சம்..

என்றும் அன்புடன்
சங்கர்....

7 comments:

துளசி கோபால் said...

:-)

நற்கீரன் said...

கலக்கல் :-)

கிவியன் said...

இந்த "ர" வா
இல்ல இந்த "ற"வான்னு
ராவெல்லாம் படிச்சு
பின்னாடி உயிர்மெய்
வருமா வராதான்னு
மயிர பிச்சு
உயிர விட்டு
நா படிச்ச
தமிழ
காக்க
சங்கரனிருக்க
பயமேன்னு

தோனுது தலீவா.
வா சங்கரா வா உன்னாலனத செய்.

Vijayakumar said...

சங்கர், உன்னுடைய பதிவு ரேட்டிங்குக்கு கீழ்கண்ட சுட்டியில் ஜாவா ஸ்கிரிப்டை இணைத்துக் கொள்ளவும்.

http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=post_rating_comment_status

அன்பு said...

வாங்க சங்கர். வணக்கம்.
கலக்கலா இருக்குது, தொடந்து எழுதுங்க.

உங்கள் மனைவி சொல்லைக் கேட்டு நடப்பது உங்களுக்கும், எங்களுக்கும் நல்லது:) சூழ்நிலை காரணமாக உங்களின் எழுத்துத்தமிழில் சில பிழைகள் இருந்தாலும் தொடர்ந்து எழுதும்போது அது கண்டிப்பாக களையும். அதற்கு இந்த தமிழ் வலைப்பதிவு ஒரு நல்ல தளம். தொடர்ந்து எழுதுங்கள்... உங்களைப்போன்ற சூழ்நிலை காரணமாக தமிழ் தொடர்பருந்தவர்கள் - தமிழில் ஆர்வம் காட்டுவதே வரவேற்கத்தக்கது. சுட்டிக்காட்டப்படும் பிழைகளைக் களைந்து முன்னேறுக.

வாழ்த்துக்கள்.

கூட இருந்தே குழிபறிக்கிறதுன்னு கேள்விப்பட்டிருக்கிறீங்களா?

அது இதுதான்:)
(ஜாலியா எடுத்துக்கோங்கப்பா...)

சங்கர், உன்னுடைய பதிவு ரேட்டிங்குக்கு கீழ்கண்ட சுட்டியில் ஜாவா ஸ்கிரிப்டை இணைத்துக் கொள்ளவும்.

http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=post_rating_comment_status

Muthu said...

நல்லா இருக்கு :-).

Geetha Sambasivam said...

இ-கலப்பை தானே? இல்லாட்டி azagi.com free download முயற்சி செய்யுங்க. தப்பு நிறைய வந்திருக்கே! திருத்துங்க முடிஞ்சா. இங்கே நிறைய சீத்தலைச் சாத்தனார்களும், பிள்ளைப் பாண்டியன்களும் இருக்கோம். :)