Friday, May 27, 2005

நினைவு நாள் - நிதியுதவி நாள்

அப்புறம் மக்களே, வணக்கம். இந்த வாரயிறுதி ஒரு நீள வாரயிறுதியாம் (Long Weekend) இந்த ஊரில்.. ஒரு மூணு நாள் சேர்ந்தாப்புல லீவு விட்டுடா போதுமடா சாமி.. பெட்ரோல் விலைய கூட கூட்டிங்கனா பாத்துக்கொங்களேன்.. என்னடா நீண்ட வாரயிறுதினு கேட்டா, நினைவு தினமாம் (Memorial Day). யாருக்குடானேன் ? ஏன்னா நம்ம ஊருல யாராவது தலைவருகளுக்கு தான் நினைவு தினம் கொண்டாடுவோம். அமெரிக்காவுக்காக பல போர்களில் கலந்துகிட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துர நினைவு தினமுனு சொன்னான் நம்ம பக்கத்து சீட்டுக்காரன்..


ஆகா, நம்ம ஊருல இப்படி கொண்டாடுனா நல்லாயிருக்குமேனு நினைச்சுகிட்டே, குமுதம் புத்தகத்தை இணைய வழி படிக்க ஆரம்பிச்சேன். எடுத்த உடனே கண்ல பட்டது நம்ம வட நாட்டு பெண் அரசியல்வாதி ஒருத்தர் தான் பிறந்தநாளை 'நிதியுதவி தினமாக' கொண்டாட செல்லி தான் தொண்டர்களுக்கெல்லாம் கட்டளையிட்டது தான்.. ஆகா, பிறந்தநாளில் இந்த அம்மணி நிறைய நிதியுதவி எல்லாம் செய்ய போறங்க.. அதான் நிதியுதவி தினமா அறிவிச்சுருக்கனும். ஆனா பாரு பாவி அடிச்சலே பலே பல்டி, அது அவங்க நிதியுதவி பண்ணுற தினமில்லையாம்.. அவங்களுக்கு எல்லாரும் நிதியுதவி பண்ணுற தினமாம்.. அந்த பணத்தில் அவங்க கட்சி வளர்க்க போறாங்களாம். (இவங்களும், இவங்க குடும்பத்தாரும் நல்ல வளர்ந்துட்டாங்க.. )

2 comments:

Muthu said...

நினைவுநாள் எல்லாம் தேவைதான், இல்லைன்னா கொஞ்ச நாள் கழிச்சு எல்லாத்தையும் மறந்துடுவோம்.

நம்மூரில் கொடிநாள் அப்படின்னு ஒன்னு இருக்குதே அது போர்வீரர்களின் நினைவாகத்தானே.

Online Security Tips and Tricks for Kids said...

முத்து,

கொடி நாள் எனக்கு தெரிஞ்சு பள்ளியில் காசு வாங்க தான் கேள்விப்பட்டுயிருக்கேன்.. ஆனா இதை சொல்லி நான் நிறையமட்டும் வீட்டில் காசு கறந்துருக்கேன்.. அந்த மட்டுக்கும் கொடிநாள் வாழ்க.