Wednesday, May 25, 2005

என்னடா எழுதுறது ?

அம்மா தாயே, எல்லாம் வல்ல ஆதி பராசக்தியே எல்லாரும் நல்லாயிருக்கனும் தாயே.. .

எப்பா, முதல் இரண்டு வரி எழுதியாச்சு.. வேற என்ன எழுதலாம்.. எல்.கே.ஜி, யூ.கே.ஜி வாழ்க்கைய பத்தி எழுதலாமா ? ஆமா, நம்ம பெரிய காந்தி, சுயசரிதையா எழுத போறோமுனு ஒரு குரல் உள்ளேயிருந்து.. எழுதுனா தான் என்னானு இன்னொரு குரல்..

எல்.கே.ஜி பள்ளி போனன்னைக்கு சருக்கு விளையாண்டு டவுசரை ஒட்டை போடத்தை எழுதவா ? இல்லை பள்ளி முடிஞ்சு எல்லாரும் வீட்டு போகும் போது னான் மட்டும் போக மாட்டேன் அடம்பிடிச்சைதை எழுதவா ?

யூ.கே.ஜி பள்ளியில் டவுசரில் ஆய் போயி ஆயாவிடம் அடி வாங்கியதை எழுதவா ? இல்லை அனுகிட்ட பாம்பு மாதிரி கை வச்சு குச்சி மிரட்டி வாங்கியதை எழுதவா ?

டேய்... டேய்... .. நிப்பாட்டு.. இதை எல்லாம் எதுக்கு எழுதனும் ? ஒரு அண்ணாச்சி அவரு வலைப்பதிவில் சொன்ன மாதிரி எழுதனுமேனு எழுதுறியா ? இல்ல ஆனந்த விகடனில் எழுதவிடலேனு எழுதுறியா ?

இப்படி எனக்குள்ளே ஆயிரம் கேள்வி ? (டேய்ய்ய்ய்.. என்னடா ஒரு ஆறு கேள்வி தானேயிருக்கு, அதுகுள்ளே ஆயிரம் கேள்விண்டே ?? )

ஏதோ மக்களே.. எதாவது எழுதுனுமுனு முடிவேடுத்தாச்சு.. நீங்க தான் அனுசரிச்சு போகனும்..

மீண்டும்.. எதாவது எழுத்திட்டு வரேன்...

என்றும் அன்புடன்
சங்கர்..

11 comments:

வசந்தன்(Vasanthan) said...

வணக்கம்.
பொறுத்துப் போகிறோம். (ஏற்கெனவே அதத்தானே செய்துகொண்டிருக்கிறோம்;-)))

Vijayakumar said...

ஆகா... வாங்க நண்பரே வாங்க. கலக்குங்க. படிக்க தான் நாங்க இருக்கிறோமே.

துளசி கோபால் said...

'அல்வா'க்கு 'அல்வா'ங்ககிட்டே இருந்து வரவேற்பு பலமா இருக்கே!!!!

சரி. நானும் இந்தக் கூட்டத்தோட சேர்ந்துக்கறேன்!

வாங்க சங்கர்! வணக்கம்.

எழுதுங்க எழுதுங்க!! படிக்க நாங்களாச்சு!!!

dondu(#11168674346665545885) said...

வருக சங்கர் அவர்களே. உங்கள் பின்னூட்ட ஆப்ஷனில் வலைப்பதிவர் பின்னூட்டங்களீ மட்டும் அனுமதிக்கவும். அனாமத்து மற்றும் அதர் பின்னூட்டங்களை செயலிழக்கச் செய்யுங்கள். இல்லாவிட்டால் இணையத்தில் இப்போது நிலவி வரும் சூழ்நிலையில் நொந்து போவீர்கள். உங்கள் குழு நண்பர்கள் நான் என்ன கூற வருகிறேன் என்பதை விலாவாரியாக விள்க்குவார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

சங்கரய்யா said...

உங்கள் வரவு நல்வரவாகட்டும்

வீ. எம் said...

வருக சங்கர் அவர்களே ,
கலக்குங்க..

V.M

Online Security Tips and Tricks for Kids said...

பின்னோட்டவிட்ட எல்லா சனங்களுக்கும், விடாத சனங்களுக்கும் என் நன்றி..

மக்களே, நானும் அல்வாசிட்டியின் அண்ணாச்சிகளில் ஒருவன் தான்.. சும்மானாத்துக்கு ஒரு வலைபதிவு ஒன்னு ஆரம்பிச்சேன்..

Vijayakumar said...

நவன், சங்கர் அண்ணாச்சி நெல்லை டவுணில் பெரிய தாதா. நீங்கள் சொல்லும் பெருமாள் தெரு டவுண் பெருமாள் தெருவாய் இருந்தால் உங்கள் அறிமுகமான முகம் என்பது உண்மை.

ஊடால வந்து கொரல் உட்றதுக்கு மன்னிக்கனும். நவன் உங்க கிட்ட ரொம்ப நாளா கேட்கனும்னு இருந்தேன். 'தாமிரபரணி தென்றலாய்' தவழும் நீங்கள், நெல்லையில எந்த இடம் தலீவா? எல்லாம் ஒரு தண்ணி குடிச்சி வளர்ந்தோம்கிற பாசம் தாம்பா...

வீ. எம் said...

சீக்கிரமா ஏதாச்சும் எழுதுப்பா... wait பன்றோம்ல... இப்போதைக்கு பெருசா ஒன்னும் வேலை இல்லபா.. !!

வீ.எம்

Vijayakumar said...

ஆஹா...நவன், ரொம்ப நெருங்கிட்டீங்கப்பு... ஆனா நம்ம ஏரியா முன்னாடி பாளையங்கோட்டை இப்போ தியாகராஜநகர். தாமிரபரணி ஆத்துபாலம் அந்தாண்ட நமக்கு கொஞ்சம் அந்நியம். அதாம்பா உங்க ஏரியா. அப்புறம் ஜான்ஸ் ஸ்கூல்ல தான் படிச்சேன் 92 வரை அப்புறமா தொழில்நுட்பம் படிக்க கோவில்பட்டிக்கு போயாச்சி. கட்டாயம் எங்கேயாச்சி நாம பார்த்திருப்போம்... பார்ப்போம்.... ஏன்னா உலகம் ஒரு கடுகு.

எனக்கு தெரிஞ்சி அல்வாசிட்டி வலைப்பதிவர்கள் யார் யாரென்றால்...

நவன், சம்மி, விஜய், சங்கர், ரோசாவசந்த், சொ.சங்கரபாண்டி...

வேறு யாரெல்லாம் இருக்காங்கப்பா, கைய தூக்குங்க.

Online Security Tips and Tricks for Kids said...

ஆகா.. நவநீ யா.. அதாவது மங்கையர்கரசி நவநீயா.. அய்யா உங்களை நல்லவே தெரியும்.. உங்களுக்கும் என்னை நல்லா தெரியும்.. நான் நம்ம சீனியோட நண்பன்.. நானும் மங்கையர்கரசி தான்..